நூல் அரங்கம்

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்

DIN

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள் - மு.அப்பாஸ் மந்திரி; பக்.224; ரூ.140; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044-2433 4397.
 தத்துவ ஞானி ஓஷோவின் எழுபது தத்துவங்களும், அந்தத் தத்துவங்களை விளக்குவதுபோல் அமைந்த எழுபது சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய முயற்சியாக இருக்கிறதே என்று நூலைப் படிக்கத் தொடங்கினால், டூ- இன்-ஒன் என்பதுபோல இரு நூல்களை வாசித்த அனுபவம் ஏற்படுகிறது.
 "நாட்டை ஆள்வதற்கு நேருவுக்கு என்ன தகுதி இருக்கிறது?' என்று வல்லபபாய் படேல் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்க, "பதவி ஆசையே இல்லாதவன் நேரு ஒருவன்தான். அந்த ஒரு தகுதி போதும்' என்று "நச்'சென்று சொல்கிறார் காந்தியடிகள். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது போன்ற ஓஷோவின் கருத்தான, "ஆசை என்பது சாதாரண உணர்வல்ல, அது பேருணர்வு. அது மனிதனைப் பெரிய விஷயத்தை நோக்கியே ஒரு விசை போலத் தள்ளுகிறது. பேருணர்வுக்கு மனிதன் அடிமையாகும்போது அவன் தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொள்கிறான். சிறுமை என்பது மிகவும் கீழான நிலை. மனிதன் தன்னைத்தானே சாக்கடையில் தள்ளிக் கொள்கிறான். பெரிய விஷயங்களில் பற்று இல்லாதவனுக்குப் பெருமை தானே தேடி வரும்' என்பது மிகவும் பொருந்தி வருகிறது.
 வெயிலுக்கு இதமான நிழலும், குளிர் காற்றையும் கொடுத்தாலும், கனி இல்லையே என்று குறை கூறிவிட்டுச் செல்லும் நன்றிகெட்ட மனிதர்களைப் பார்த்து ஆலமரம் விடும் பெருமூச்சு, ஓஷோவின், "பெரும்பாலான மனிதர்களின் மனம் சுயநலம் நிறைந்தது; எவ்வளவு லாபம் கிடைத்தாலும் எளிதில் திருப்தியடையாது; இன்னும் கிடைக்கவில்லையே என்று குறை கூறும்; அந்த மனம் இருக்கும் மனிதர்களால் வாழ்க்கையில் நிறைவு காணவே முடியாது. நன்றிகெட்ட மனிதர்கள் என்ற இழி நிலை அவர்களை விட்டு நீங்கவே நீங்காது' - என்கிற தத்துவத்தோடு அற்புதமாகப் பொருந்துகிறது.
 இவ்வாறு நூல் முழுவதும் ஓஷோவின் தத்துவங்களோடு கதையும்; கதையோடு ஓஷோவின் தத்துவமும் பொருந்தி இழையோடிக் கலந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT