சங்க அக நூல்களும் காமத்துப்பாலும் - முனைவர் கு.சக்திலீலா; பக்.262; ரூ.290; காவ்யா, சென்னை-24; ✆044-23726882.
பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் வழி நின்று சங்க இலக்கியங்களில் தமிழரின் அக நிலையை அப்படியே படம் பிடிப்பது போல காட்சிப்படுத்தி நூலாசிரியர் விளக்கியுள்ளார். திணைக் கோட்பாடு,செவ்வியல் இலக்கியத்தில் காதல், அகமாந்தர்கள், பொருள் ஒப்புமை, புலப்பாட்டுத் திறன் என ஐந்து தலைப்புகளில் பாடல்களையும் எளிதில் படிப்போர் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.
சங்க அகப்பாடல்களில் காதல், காமம் எனும் சொற்கள் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதையும், அவை தரும் பொருள்களையும் கலித்தொகை, பரிபாடல் மூலம் விளக்கியுள்ளார். அதேபோல இன்பம் எனும் சொல் சரியாக எந்தப் பொருளை குறிக்கிறது என்பதையும் ஆய்வு நோக்கில் விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கத்து.
தமிழரின் தனிமனித வாழ்வையும், அதன் வழியாக தமிழ்ச் சமுதாயத்தின் பழமையான வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்துபவையாக சங்க அக நூல்கள் திகழ்வதை அவற்றுக்கான பாடல்கள் மூலம் இளந்தலைமுறைக்கு ஏற்ப எளிமையாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கிய சாராம்சம் சங்க அக நூல்களும், காமத்துப்பாலும் எனும் தலைப்பில் நூலாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பண்பாட்டை எடுத்துரைக்கும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.