நூல் அரங்கம்

ஆபரேஷன் சிந்தூர்

வரலாறு, போர் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகருக்கு நிறைவான விருந்து படைத்திருக்கிறார்.

தினமணி செய்திச் சேவை

ஆபரேஷன் சிந்தூர் - இந்தியாவின் தர்மயுத்தம்- விதூஷ்; பக்.168; சிறப்பு விலை ரூ.99; சுவாசம் பதிப்பகம், பொன்மார், சென்னை 600127. ✆ 81480 66645.

ஏப்ரல் 22, 2025 காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியர்களின் மனதைவிட்டு அகலாத துயரமாகப் பதிந்துவிட்டது. எல்லைக்கு அப்பாலிருந்து வந்த பயங்கரவாதத்தின் புதிய குரூர முகம் அதில் வெளிப்பட்டது. மத அடிப்படையில் அப்பாவி இலக்குகளைத் தீர்மானித்து, அவர்களின் அன்புக்குரியவர்களின் முன்னிலையிலேயே அவர்களை பலி கொண்டது. இந்தக் கொடூரமான சம்பவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ராணுவ அதிரடித் தாக்குதல் நடவடிக்கைதான் 'ஆபரேஷன் சிந்தூர்'.

எதிரி நாட்டை அச்சத்திலும் உலக நாடுகளை வியப்பிலும் ஆழ்த்தி, எதிர்காலப் போருக்கு இந்தியா தயாராக உள்ளது என்று உலகுக்கு உணர்த்தியது ஆபரேஷன் சிந்தூர் என்று நூலாசிரியர் நிறுவுகிறார்.

ஆபரேஷன் சிந்தூர் வியூகம் திட்டமிடல் முதல், வெற்றிகரமாகச் செயல்படுத்துதல் வரை அனைத்து விவரங்களையும் சுவாரஸ்யம் குன்றாமல் கோர்வையாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.

இந்தப் போரில் நாட்டின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதை நன்கு விளக்கியுள்ளார். முதல் கட்டமாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்கு வைத்து தாக்கப்பட்டன. இதன் அடுத்தகட்டம்தான் ஏவுகணைகளுடன் கூடிய எதிரி கலங்கும் படியான அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூரின் முழுமையான செயல் வடிவத்தை விரிவான ஆராய்ச்சி செய்து, பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களைத் திரட்டி நூலாசிரியர் விதூஷ் இந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.

எதிரி நாட்டின் எந்தப் பகுதியும் நம்மால் எட்ட முடியாத, பாதுகாப்பான புகலிடமல்ல என்பதை ஆபரேஷன் சிந்தூர் அவர்களுக்கு உணர்த்தியதுதான் இந்த நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று நூலாசிரியர் அழுத்தமாக எடுத்துரைக்கிறார். வரலாறு, போர் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகருக்கு நிறைவான விருந்து படைத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT