தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 5

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 5:

    பல்லில் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    எல்லி ஆட்டுகந்தார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

பல்லில்=பல்+இல், பற்கள் இல்லாத, எல்லி=இரவு;

பொழிப்புரை:

பற்கள் ஏதும் இல்லாத உலர்ந்த மண்டையோட்டினை, தான் பலியேற்கச் செல்லும்போது தனது உண்கலனாக எடுத்துச் செல்லும் பெருமான், இரவில் நடனம் ஆடுவதை மிகவும் விரும்புகின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் வீற்றிருந்து   அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT