முகப்பு
தமிழ்நாடு

தேங்காய்ப்பால் சாயனம்

பொங்கல் ஸ்பெஷலில் இதுவும் ஒன்று. 

Updated On : 7 ஜனவரி 2021, 11:20 am IST
பகிர்:

தேவையானவை:

அரிசி மாவு  -  கால் கிண்ணம்
கெட்டி  தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால்  - தலா  1 கிண்ணம்
நெய் -  2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் -  1 கிண்ணம்
பொடியாக  நறுக்கிய  தேங்காய் -   2 தேக்கரண்டி

செய்முறை:  

Advertisement

Advertisement

வாணலியில்   நெய்விட்டு,  தேங்காய்த்  துண்டுகளைச்   சேர்த்து, சிவக்க வறுத்து   எடுத்துக் கொள்ளவும்.  அதே  வாணலியில்,  நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து,   வாசனை வரும்வரை  நன்கு  வறுக்கவும். 

பின்னர், நீர்த்த  தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், கெட்டி தேங்காய்ப்பால்,  வெல்லம்  சேர்த்து   கொதிக்க வைக்கவும். எல்லாமாக  சேர்த்து நன்கு கொதித்து  வரும்போது,  அடுப்பை  அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்  துண்டுகளைச்  சேர்த்து பரிமாறவும். சுவையான சாயனம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments