சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?
சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே சேர்ப்பதற்கு பதில் வெல்லப்பாகு காய்ச்சி சேர்த்தால் சுவை கூடுதலாகவும், நீண்ட நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே சேர்ப்பதற்கு பதில் வெல்லப்பாகு காய்ச்சி சேர்த்தால் சுவை கூடுதலாகவும், நீண்ட நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.
* இனிப்பு பொங்கல் செய்யும்போது மொத்தமாக நெய் விடாமல், பரிமாறும்போது பொங்கலின் மீது சிறது நெய் ஊற்றி பரிமாறினால் நெய் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
* தண்ணீருடன், சிறிது பால் அல்லது மில்க்மெய்ட் சேர்த்து பொங்கல் செய்தால் சுவை கூடும்.
Advertisement
Advertisement
* சர்க்கரைப் பொங்கல் பரிமாறும் போது, மேலாக சிறிது தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம்.
* முழு அரிசியில் பொங்கல் செய்யாமல், மிக்சியில் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து செய்தால் விரைவில் வெந்துவிடும். நல்ல குழைவாகவும் இருக்கும்.
* முந்திரி, பாதாமை ஒடித்து போடாமல், மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து சேர்த்தால் இனிப்பு பொங்கலில் சுவை கூடுதலாக இருக்கும்.
* பச்சரிசிக்குப் பதில், வரகு, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களில் பொங்கல் செய்தால் உடலுக்கு சத்தானதாக இருக்கும்.
* அரிசி, பாசிபருப்பை தனித்தனியே வேக வைத்து பின்னர் சேர்த்து கிளறி வெல்லம் சேர்த்தால் பொங்கல் நன்கு குழைவாக இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.