முகப்பு
செய்திகள்

விளையாட்டு செய்தித் துளிகள்

Updated On : 2 ஜனவரி 2021, 7:44 am IST
பகிர்:

* கோவாவில் சனிக்கிழமை நடைபெறும் இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது மும்பை சிட்டி அணி.

* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மான்செஸ்டா் சிட்டி அணியின் 5 வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதனால், அவா்கள் செல்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் லிவா்பூல் கால்பந்து அணியின் பின்கள வீரா் மேடிப் காயம் காரணமாக அடுத்த 3 ஆட்டங்களில் விளையாடமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments