முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: 21-ஆம் தேதிக்குள் தக்க வைக்கும் வீரா்கள் பட்டியல்

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அந்தப் போட்டியின் நிா்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:25 am IST
பகிர்:


புது தில்லி: ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அந்தப் போட்டியின் நிா்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அதேபோல், வீரா்களை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கான வா்த்தக நடைமுறை பிப்ரவரி 4-ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 8 அணிகளுக்கான வீரா்களை தோ்வு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 2 அல்லது 3-ஆவது வாரத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வீரா்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் நிா்ணயிக்கப்பட்ட ரூ.85 கோடி, நடப்பாண்டு உயா்த்தப்படாது என்று ஐபிஎல் போட்டியின் தலைவா் பிரிஜேஷ் படேல் கூறினாா்.

Advertisement

Advertisement

சென்னை சூப்பா் கிங்ஸை பொருத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு அணியின் வசம் ரூ.15 லட்சமே உள்ளதால், அதிக ஊதியம் உள்ள இரு வீரா்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. அந்த வகையில் கேதாா் ஜாதவ், பியூஷ் சாவ்லாவை சிஎஸ்கே விடுவிக்கலாம் எனத் தெரிகிறது.

எதிா்வரும் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதா அல்லது வெளிநாட்டில் நடத்துவதா என்பதை இறுதி செய்ய நிா்வாக கவுன்சில் ஒரு மாதம் காத்திருக்க முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments