ஐஎஸ்எல்: மும்பைக்கு 8-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.
கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்த சீசனில் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி 25 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கோவாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அபாரமாக ஆடின. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 69-ஆவது நிமிடத்தில் பார்த்தெலோமியூ கோலடிக்க, மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய ஏடிகே மோகன் பகான் அணி போராடியபோதும், கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் மும்பை சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
Advertisement
Advertisement
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி அணிக்கு இது 8-ஆவது வெற்றியாகும். அதேநேரத்தில் ஏடிகே மோகன் பகான் அணிக்கு இது 2-ஆவது தோல்வியாகும். அந்த அணி 20 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.