முகப்பு
செய்திகள்

தாய்லாந்து ஓபன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர்  முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

Updated On : 14 ஜனவரி 2021, 4:23 am IST
பகிர்:

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர்  முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-15, 21-15  என்ற நேர் செட்களில் மலேசியாவின் செல்வதுரை கிஷோனாவை வீழ்த்தினார். 
முன்னதாக செவ்வாய்க்கிழமை சாய்னாவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் சாய்னா ஏற்கெனவே கரோனாவால்

பாதிக்கப்பட்டிருந்ததால், தனக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என புகார் தெரிவித்திருந்தார். 
இதையடுத்து அவருக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். சாய்னா தனது 2-ஆவது சுற்றில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ரங்கானை எதிர்கொள்கிறார். 
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின்  ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான செüரவ் வர்மாவை வீழ்த்தினார். ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள மலேசியாவின் ஜி ஜியா லீயை எதிர்கொள்கிறார். ஜி ஜியா லீ தனது முதல் சுற்றில் 13-21, 21-14, 21-8 என்ற செட் கணக்கில்  இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாயை வீழ்த்தினார். 
அதேநேரத்தில் மற்றொரு இந்திய வீரரான காஷ்யப், கனடாவின் ஜேசன் ஆண்டனியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 9-21 என்ற கணக்கில் இழந்த காஷ்யப், அடுத்த செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். 
இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் காஷ்யப் 8-14 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments