முகப்பு
விளையாட்டு

கல்லூரிகள் இடையிலான விளையாட்டு: சென்னையில் இன்று தொடக்கம்

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப்

Updated On : 2 மார்ச் 2013, 2:44 am IST
பகிர்:

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது.

"11-வது ஜெட்ஸ் 2013' என்ற பெயரில் கல்லூரியின் விளையாட்டுக் கிராமத்தில் நடைபெறும் இப் போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 86 அணிகள் பங்கேற்கின்றன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிர் போட்டிகளில் கூடைப்பந்து, வாலிபால், செஸ், டேபிள் டென்னிஸ், பால் பாட்மிண்டன், கபடி ஆகிய 6 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

வரும் 9 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் ஆடவர் பிரிவு போட்டிகளில் கூடைப்பந்து, வாலிபால், செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், பால் பாட்மிண்டன், கபடி, கால்பந்து ஆகிய 8 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.  மேற்கண்ட தகவலை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி இயக்குநர் பாபு மனோகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.