முகப்பு
விளையாட்டு

தென் மண்டல ஹேண்ட்பால்: தமிழக அணிகள் ஆதிக்கம்

மதுரையில் நடைபெற்று வரும் தென் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை

Updated On : 2 மார்ச், 2013 at 2:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

மதுரையில் நடைபெற்று வரும் தென் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை தமிழக ஆடவர், மகளிர் அணிகள் ஆதிக்கம் செலுத்தின.

தென் மண்டல அளவிலான ஆடவர், மகளிர் ஹேண்ட்பால் போட்டி மதுரை நாகசிவா பாலிடெக்னிக் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. லீக் முறையில் நடைபெறும் இப் போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டங்களில் தமிழகம் 35-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கர்நாடகம் 34-17 என்ற கணக்கில் கேரளத்தையும், ஆந்திரம் 27-21 என்ற கணக்கில் புதுச்சேரியையும், தமிழகம் 37-31 என்ற கணக்கில் கேரளத்தையும், கர்நாடகம் 43-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும் வீழ்த்தின.

மகளிர் பிரிவில் தமிழகம் 12-5 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கேரளம் 18-6 என்ற கணக்கில் கர்நாடகத்தையும், தமிழகம் 12-7 என்ற கணக்கில் கர்நாடகத்தையும் வீழ்த்தின.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.