விளையாட்டு

அடுத்த சர்ச்சை: தயான் சந்த் விருது தர எதிர்ப்பு!

நாளை விருது வழங்கப்படும் நிலையில் மனு பற்றிய விளக்கத்தை  2 வாரத்தில் அளிக்க

சநகன்

நாளை தயான் சந்த் விருது 3 பேருக்கு வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹாக்கி பயிற்சியாளர் ரோமியோ ஜேம்ஸ், டென்னிஸ் பயிற்சியாளர் ஷிவ் பிரகாஷ் மிஷ்ரா, கைப்பந்து பயிற்சியாளர் டிபிபி நாயர் ஆகியோர் தயான் சந்த் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை (29-ம் தேதி) தேசிய விளையாட்டு தினத்தன்று விருது வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், 3 பேருக்கு விருது தர மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விருதுக்குத் தேர்வாகியுள்ள 3 பேரைவிட நான் தகுதியானவன், எனவே தனக்கு தயான் சந்த் விருதை அளிக்கவேண்டும் என ரஞ்சித் குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை விருது வழங்கப்படும் நிலையில் மனு பற்றிய விளக்கத்தை  2 வாரத்தில் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க, கர்நாடக உயர் நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. இப்போது தயான் சந்த் விருது தேர்வுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT