முகப்பு
விளையாட்டு

ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 256 ரன்கள் இலக்கு! ராயுடு சதம்!

ராயுடு அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது அவருடைய இரண்டாவது சர்வதேச சதமாகும்.

Updated On : 10 ஜூலை, 2015 at 4:14 PM
பகிர்:

ஹராரேவில் நடைபெறும் இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணியில் ரஹானே, விஜய், ராயுடு, திவாரி, உத்தப்பா, ஜாதவ், பின்னி, அக்‌ஷர், ஹர்பஜன், புவனேஷ்வர், குல்கர்ணி ஆகியோர் உள்ளார்கள். உத்தப்பா இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

ஆரம்பம் முதல் இந்திய அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாறியது.

தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரஹானே ஓரளவு நன்றாக ஆடினாலும் அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், அதன்பிறகுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்க ஆரம்பித்தது.

நான்காவதாக களமிறங்கிய திவாரி, 2 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். பிறகு ஜாதவ்வும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களில் என்கிற பரிதாபமான நிலைக்கு வந்தது.

ராயுடு - பின்னி ஜோடி பொறுப்பாக ஆடி, இந்தியாவை சரிவிலிருந்து மீட்டியது. ராயுடு அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது அவருடைய இரண்டாவது சர்வதேச சதமாகும். பின்னியும் பிரமாதமாக ஆடி 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ராயுடு - பின்னி ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் 6-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. ராயுடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் (12 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.