வங்க தேசத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது.
இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. அணியின் கேப்டன் கிஷன் 6 ரன்களில் ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரிஷாப் பாண்ட் நமீபியா பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி 96 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக எஸ்.என்.கான் 76 ரன்களும், அர்மான் ஜாபர் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய நமீபியா அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியால் 39 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவின் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் சார்பில் தாகர், அன்மோல்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.