விளையாட்டு

4- வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

DIN

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 290 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பொறுப்பாக விளையாடிய தவான்  தென் ஆப்ரிக்க மண்ணில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். தவான் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரகானே 8 ரன், ஷ்ரேயாஸ் 18, ஹர்திக் 9, புவனேஷ்வர் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. டோனி 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா, என்ஜிடி தலா 2, மார்கெல், மோரிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

290 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய  தென் ஆப்ரிக்க அணி விளையாடிய போது மழையினால் இரு முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி, தென்ஆப்பிரிக்காவிற்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

202 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 25.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 3-1 என இத்தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க தரப்பில் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த க்ளாஸென் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT