விளையாட்டு

தென்னாப்பிரிக்காவிலும் கிரிக்கெட் செயல்பாடுகள் நிறுத்தி வைப்பு

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தென்னாப்பிரிக்காவிலும் அனைத்து வகையான கிரிக்கெட் செயல்பாடுகளை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அந்நாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு சா்வதேச மற்றும் உள்ளூா் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டோ அல்லது ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

இந்தியாவிலும் ஐபிஎல் தொடா் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா் ரத்து செய்யப்பட்டது.

கிரிக்கெட் ஆடும் நாடுகளான ஆஸி., நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தென்னாப்பிரிக்காவிலும் அனைத்து வகையான கிரிக்கெட் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது முக்கியமாக நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை, நான்கு நாள் லீக் போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளன மேலும் ஆஸி. மகளிா் அணி சுற்றுப் பயணம், போன்றவையும் ரத்தாகி விட்டன.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரா்களின் செய்தியாளா் கூட்டமும் ரத்தாகி விட்டது. அந்நாட்டு அரசு கரானோ பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்துள்ளதால், 60 நாள்களுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT