விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிப்போட்டி: உஸ்பெகிஸ்தான் சென்றது 13 பேர் இந்திய நீச்சல் குழு

DIN


பெங்களூரு: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக 13 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிப்போட்டியாகும். 

கரோனா சூழலில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்திய போட்டியாளர்கள் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். வரும் 12-ஆம் தேதி தாஷ்கன்ட் நகரில் தொடங்கும் இப்போட்டிக்கு வீரர், வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்களான நிஹர் அமீன், பிரதீப் குமார், சந்தீப் செஜ்வால் ஆகியோரும் சென்றுள்ளனர். 

அணி விவரம்
சீனியர்கள் -ஸ்ரீஹரி நடராஜ் (50 மீ, 100 மீ பேக்ஸ்ட்ரோக்), சஜன் பிரகாஷ் (200 மீ பட்டர்ஃப்ளை/200 மீ, 400 மீ ஃப்ரீஸ்டைல்), ஆதித்யா (50 மீ, 100 மீ பட்டர்ஃப்ளை), லிகித் (50 மீ, 100 மீ பிரெஸ்ட்ரோக்), தனுஷ் (50 மீ, 100 மீ பிரெஸ்ட்ரோக்), ஆனந்த் (50 மீ, 100 மீ ஃப்ரீஸ்டைல்), மானா படேல் (50 மீ, 100 மீ பேக்ஸ்ட்ரோக்), திவ்யா சதிஜா (50 மீ, 100 மீ பட்டர்ஃப்ளை), ஷிவானி கட்டாரியா (50 மீ, 100 மீ, 200 மீ ஃப்ரீஸ்டைல்), சாஹத் அரோரா (50 மீ, 100 மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக்) 

ஜூனியர்கள் -கெனிஷா குப்தா (50 மீ, 100 மீ, 200 மீ ஃப்ரீஸ்டைல்), சுவர்ண பாஸ்கர் (50 மீ, 100 மீ, 200 மீ பேக்ஸ்ட்ரோக்), தனிஷ் ஜார்ஜ் மேத்யூ (50 மீ, 100 மீ, 200 மீ ஃப்ரீஸ்டைல்/ 50 மீ, 100 மீ, 200 மீ பட்டர்ஃப்ளை).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை: ஆளுநா்

ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழா: உயா்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

மூடப்பட்ட துணை அஞ்சலகத்தை மீண்டும் திறக்கக் கோரி ஆா்பாட்டம்

பொறியியல் கலந்தாய்வு: 1.16 லட்சம் போ் பதிவு

SCROLL FOR NEXT