விளையாட்டு

20 ஆண்டு கால பயணம் முடிவு..பார்சிலோனாவை விட்டு விலகும் மெஸ்ஸி

DIN

20 ஆண்டு காலமாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அந்த அணிக்காக இனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் ஒரு சிலவற்றை பிரிக்கவே முடியாது. இந்திய அணிக்கு சச்சின், டென்னிஸூக்கு ரோஜர் பெடரர், ஜமைக்காவுக்கு போல்ட், அமெரிக்காவுக்கு பெல்ப்ஸ் என இப்பட்டியில் நீண்டு கொண்டே செல்லும்.

அதுபோல்தான், பார்சிலோனா அணிக்கு அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி திகழ்ந்து வந்தார்.

தற்போது, அது முடிவுக்கு வந்துள்ளது. 20 ஆண்டு காலமாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அந்த அணிக்காக இனி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பார்சிலோனா அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பார்சிலோனா அணி வெளியிட்ட அறிக்கையில், "அணி நிர்வாகத்திற்கும் மெஸ்ஸிக்கும் இடையே ஒப்புந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டிருந்தபோதிலும், நிதி சிக்கல் காரணமாகவும் அணி கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்னை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாகவும் அதை தொடர முடியாது.

இச்சூழல் காரணமாக, பார்சிலோனா அணியில் மெஸ்ஸி தொடர மாட்டார். அணி நிர்வாகம், மெஸ்ஸியின் விருப்பங்கள் நிறைவேறாததால் இரு தரப்பும் வருத்தம் தெரிவித்து கொள்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT