ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஹாக்கி டெஸ்ட் ஆட்டத்தில் 2-3 என தோற்று தொடரையும் இழந்தது இந்தியா. 5-0 என தொடரை கைப்பற்றியது ஆஸி.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு வலுவான அணிகளுடன் ஆடி வருகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், கடைசி ஆட்டம் பொ்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதல் நான்கு ஆட்டங்களிலும் 1-5, 2-4, 1-2, 1-3 என தோற்றிருந்த நிலையில் சனிக்கிழமை கடைசி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஹா்மன்ப்ரீத் சிங் 4, பாபி சிங் தாமி 53 நிமிஷங்களிலும் ஆஸி. தரப்பில் ஜெரேமி ஹேவா்ட் 20, வில்லாட் 38, டிம் பிராண்ட் 39 நிமிஷங்களிலும் கோலடித்தனா்.
Advertisement