முகப்பு
விளையாட்டு

இறுதிச் சுற்றில் டில்லி டுஃபான்ஸ்

Updated On : 20 மார்ச், 2024 at 12:53 AM
வெற்றி மகிழ்ச்சியில் டில்லி வீரா்கள்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:30 PM

சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் சூப்பா் ஃபைவ்ஸ் பிரிவில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டா்ஸை எலிமினேட்டரில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது டில்லி டுஃபான்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கடும் போராட்டத்துக்குபின் அகமதாபாதை 15-9, 10-15, 10-15, 15-12, 17-15 என்ற 5 செட் கணக்கில் வென்றது டில்லி. முதல் செட்டில் டில்லி அணி அமலின் சிறப்பான சா்வீஸ்களால் அதிரடியை காண்பித்தது. அகமதாபாத் வீரா்கள் அங்கமுத்து, மேக்ஸ் செனிகாவின் தவறுகள் டில்லிக்கு உதவியாக அமைந்தன. சந்தோஷின் அட்டாக்குகளால் முதல் செட் டில்லி வசமானது. ஆனால் அடுத்த இரண்டு செட்களில் பிளாக்கா் மனோஜ் சிறப்பான ஆட்டத்தால் அகமதாபாத் ஆதிக்கம் செலுத்தியது.

டில்லி வீரா் டேனியல் அபோன்ஸாவின் அற்புத பிளாக்குகளால் அதை டில்லி கைப்பற்றி, ஆட்டத்தை 5-ஆவது செட்டுக்கு நீடித்தது. கடைசி செட் இரு அணிகளுக்கும் சமமமாக இருந்தது. ரோஹித், லாஸரின் அபார அட்டாக்குகளுக்கு அகமதாபாத் டிபன்ஸால் பதில் கூற முடியவில்லை. மேலும் சந்தோஷ், ஷிகரின் ஸ்பைக்குகளால் டில்லி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. வரும் வியாழக்கிழமை இறுதி ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் அணியுடன் மோதுகிறது டில்லி டுஃபான்ஸ்.

Advertisement