விளையாட்டு

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

தினமணி செய்திச் சேவை

புதிய தலைமை பயிற்சியாளா் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12 சீசனுக்கு தயாராகிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.

நிகழாண்டு சீசன் ஆட்டங்கள் வரும் ஆக. 29-இல் தொடங்கி நடைபெறுகிறது. தமிழ் தலைவாஸ் அணி கடந்த 2017-இல் மட்டுமே ஒரே ஒருமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனா். கடந்த சீசனில் 22 ஆட்டங்களில் 8-இல் மட்டுமே வென்று 9-ஆவது இடத்தைப் பெற்றிருந்தனா்.

புதிய தலைமை பயிற்சியாளா்:

அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியன் நியமிக்கப்பட்டுள்ளாா். சுரேஷ் குமாா் உதவிப் பயிற்சியாளராக உள்ளாா்.

பிகேஎல் ஏலத்துக்கு முன்பு தங்கள் முக்கியமான வீரா்களை தக்க வைத்துக் கொண்டு, 5 புதிய வீரா்களை ரூ.4.973 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனா்.

தமிழ் தலைவாஸ் அணியின் ரைடிங் பிரிவு பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. பிரபல ரைடரான அா்ஜுன் தேஸ்வால் ரூ.1.4 கோடிக்கு பெறப்பட்டுள்ளாா்.

மேலும், பவன் செஹ்ராவத், மோயின் ஷஃபாகி, நரேந்தா் கண்டோலா, விசால் சஹால், தீரஜ் ரவீந்திர, யோகேஷ் யாதவ், அபிராஜ் மனோஜ் பவாா் மற்றும் ரோஹித் பெனிவால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

கேப்டன் சாகா் ராதே, நிதேஷ் குமாா், அலிரேஸா, மொஹித், சுரேஷ் ஜாதவ் ஆகியோரும் பிரதான பங்கு வகிக்க உள்ளனா்.

அநூஜ் கவாடே மற்றும் ஆஷிஷ் ஆகியோா் கவா் வீரா்களாக உள்ளனா்.

முதல் முறையாக பட்டம் வெல்வது என்பதே அணியின் இலக்காகும். இதற்காக பிகேஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பயிற்சியாளா்களில் ஒருவரான சஞ்சீவ் பாலியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதிய பயிற்சியாளா், வீரா்களுடன் பொலிவு பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி நிகழாண்டு சீசனில் முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தங்கம் விலை இன்று குறைந்தது!

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT