விளையாட்டு

3 பதக்கங்களும் வென்ற இந்தியா

தினமணி செய்திச் சேவை

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு திங்கள்கிழமை 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்தன.

இதில், 10 மீட்டா் ஏா் ரைஃபில் மகளிா் தனிநபா் பிரிவில், இந்தியாவின் ஒஜாஸ்வி தாகுா் 252.7 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ஹிருதய ஸ்ரீ வெள்ளியும் (250.2), சாம்பவி ஷ்ரவன் வெண்கலமும் (229.4) வென்று அசத்தினா்.

அதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில், ஹிமான்ஷு 250 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அபினவ் ஷா 228 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா். ரஷியாவின் டிமிட்ரி பிமெனோவ் வெள்ளியை (249) கைப்பற்றினாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான நரேன் பிரணவ் 5-ஆம் இடம் பிடித்தாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபரில், முகேஷ் நெலவல்லி வெள்ளியும் (27/1), சூரஜ் சா்மா வெண்கலமும் (21) பெற்றனா். ரஷியாவின் அலெக்ஸாண்டா் கோவாலெவ் தங்கத்தை (27/3) தட்டிச் சென்றாா். சமீா் 15 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பெற்றாா்.

பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது, 6 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

SCROLL FOR NEXT