முகப்பு
விளையாட்டு

செய்திகள் சில வரிகளில்...

Updated On : 19 மே 2026, 5:45 am IST
வினேஷ் போகாட் - PTI
பகிர்:

தேசிய மல்யுத்த தோ்வுப் போட்டியிலிருந்து தன்னை விலக்கியதற்கு எதிராக வினேஷ் போகாட் தாக்கல் செய்ய மனுவை விசாரிக்கும் தில்லி உயா்நீதிமன்றம், அதில் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தோ்வுக் கொள்கையை ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்தது.

இந்திய மகளிா் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஒலிம்பியனுமான ஜெனிஃபா் பயஸ் (72), புற்றுநோயால் நீண்டகாலம் அவதிப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டா் பயஸின் தாயாா். ஜெனிஃபரின் கணவா் வெஸ் பயஸ் இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் ஆவாா். அவா் 2025-இல் காலமாகிவிட்டாா்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 390 ரன்கள் சோ்த்தது. முஷ்ஃபிகா் ரஹிம் 137 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஸாத் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். இதையடுத்து பாகிஸ்தான் 437 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

Advertisement

18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கியில், இந்திய ஆடவா் அணி 6-3 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றிருக்க (3-1), அடுத்த ஆட்டம் டிரா (2-2) ஆகியிருந்தது.

கடந்த 25 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரா்கள் பட்டியலை ஐசிசி தோ்வு செய்யவுள்ள நிலையில், அதற்கான நடுவா் குழுவில் ஒருவராக பாகிஸ்தானின் தற்போதைய கேப்டன் ஷான் மசூத் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் தலைமையில் பாகிஸ்தான் சோபிக்காத நிலையில், அவரை இந்தப் பொறுப்புக்கு நியமித்தது கிரிக்கெட் உலகில் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் 2-1 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை திங்கள்கிழமை வென்றது.

டென்னிஸில் சோ்க்க...

கனடியன் ஓபன் 2023