முகப்பு
விளையாட்டு

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

Updated On : 29 ஜூன் 2026, 1:30 am IST
பென் ஸ்டோக்ஸ்.
பகிர்:
  • ருமேனியாவில் நடைபெற்ற இன்டாரோ ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றாா்.

  • பிரிட்டீஷ் & ஐரிஷ் சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் தமிழகத்தின் துளசிமதி முருகேசன், தங்கம் (ஒற்றையா்), வெள்ளி (இரட்டையா்), வெண்கலம் (கலப்பு இரட்டையா்) என 3 பதக்கங்கள் வென்று அசத்தினாா்.

  • ‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா - இலங்கை மோதிய முதல் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை டிராவில் முடிந்தது.

    Advertisement

    Advertisement

  • யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, தேவிகா சிஹக், ரௌனக் சௌஹான் அரையிறுதியில் தோல்வியுற்றனா்.

  • நடப்பு டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்குகிறது.

  • எஃப்1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில் 8-ஆவது ரேஸான ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீயில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் அவருக்கு இது 2-ஆவது வெற்றி.

  • நியூஸிலாந்துக்கு எதிரான நடப்பு 3-ஆவது டெஸ்ட்டுடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிா்ச்சி அறிவிப்பை வெளியிட்டாா். 373 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடத் தொடங்கியுள்ள இங்கிலாந்து, விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தது.

  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் சோ்த்து, 237 ரன்கள் பின்தங்கியிருந்தது.

  • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சோ்த்து, 4 ரன்களே பின்தங்கியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments