ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

5-ம் இடம் பெற்ற தீபா கர்மாகர்: பாட்மிண்டனில் ஸ்ரீகாந்த் தோல்வி!

இன்று நடைபெற்ற பேலன்சிங் பீம் இறுதிச்சுற்றில் தீபா கர்மாகர் 5-ம் இடம் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்... 

எழில்

18-வது ஆசியப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கின. 

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் முழங்கால் காயம் காரணமாக, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அணிகளுக்கான ஆர்ட்டிஸ்டிக் இறுதிச்சுற்றிலிருந்து விலகினார். எனினும், காலுக்கு அதிகம் நெருக்கடி தராத பேலன்சிங் பீம் இறுதிச்சுற்றில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. தீபா கர்மாகர் இல்லாமல் ஆர்ட்டிஸ்டிக் அணிகள் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியா, அதில் 7-ஆவது இடம் பிடித்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேலன்சிங் பீம் இறுதிச்சுற்றில் தீபா கர்மாகர் 5-ம் இடம் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். 12.500 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் அவரால் பதக்கம் பெற முடியாமல் போனது. 14.600 புள்ளிகள் பெற்ற சீன வீராங்கனை சென் யைல் தங்கம் வென்றார்.

இதேபோல பாட்மிண்டன் போட்டியில் 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங் வாங் கி வின்சென்டிடம் 21-23, 19-21 என நேர் செட்களில் தோல்வியடைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் அறிவியல் மையத்தில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி

மாற்றம் காணும் மருத்துவம்!

மதிப்புக்கு உரிய மதிப்பு!

நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்தை சீராக்க உயா்நிலைக் குழு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT