முகப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டியில் தொடர்ச்சியாகப் பதக்கம் பெறும் ஹீனா சித்து: வெண்கலம் வென்று அசத்தல்!

இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

18-வது ஆசியப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றுள்ளார். இதற்கு முன்பு 2010, 2014 ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தார். எனினும் தனிநபர் போட்டியில் முதல்முறையாகப் பதக்கம் வென்றுள்ளார். 

கடந்த காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கமும் ஒரு வெள்ளியும் வென்றார். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் ஹீனா பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. சீனா 60 தங்கம் உள்ளிட்ட 123 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →