வில்வித்தை: இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய அணி தென் கொரியாவிடம் வீழ்ந்தது...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய அணி தென் கொரியாவிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
காம்பவுண்ட் பிரிவு அரையிறுதியில் சீன தைபேவை 227-230 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா. இதையடுத்து இறுதிச்சுற்றில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்டது இந்திய அணி. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முடிவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள் பெற்றன. இதையடுத்து நடைபெற்ற ஷூட் ஆஃப் முறையில் கொரிய அணி வென்று தங்கப்பதக்கத்தை வென்றது. ரஜத் செளகான், அமன் சயினி, அபிஷேக் வர்மா ஆகியோரைக் கொண்ட இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதற்கு முன்பு, வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் தென் கொரிய அணி 231-228 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று தங்கத்தைத் தட்டிச் சென்றது. இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மதுமிதா குமாரி, முஷ்கன் கிரர், ஜோதி வென்னம் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள்.
Advertisement