கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

பரிதாப நிலைமை: உலகக் கோப்பைப் போட்டியில் கடைசி ஓவரில் அதிக முறை தோற்றுள்ள தென் ஆப்பிரிக்கா!

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 241/6 ரன்களைச் சேர்த்தது. இரண்டாவதாக ஆடிய நியூஸி. 245/6 ரன்களை எடுத்து வெற்றது. இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது நியூஸிலாந்து.  தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைசி ஓவரில் அதிக தடவை தோற்றுள்ள அணி என்கிற வேதனையைச் சந்தித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

இதுவரை அந்த அணி இரண்டாவதாகப் பந்துவீசும்போது 5 முறை கடைசி ஓவரில் தோற்றுள்ளது. இதுபோல வேறெந்த அணிக்கும் நேர்ந்ததில்லை. 

2-வதாகப் பந்துவீசியபோது கடைசி ஓவரில் அதிகமுறை தோற்ற அணிகள்

5 தடவை - தென் ஆப்பிரிக்கா
3 தடவை - இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள்
2 - இந்தியா
1 - பாகிஸ்தான், யூஏஇ, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, இலங்கை

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா தோற்ற தருணங்கள்

vs இலங்கை, வெல்லிங்டன், 1992 
vs இங்கிலாந்து, எம்சிஜி, 1992 
vs ஆஸ்திரேலியா, லீட்ஸ், 1999 
vs நியூஸிலாந்து, ஆக்லாந்து, 2015 
vs நியூஸிலாந்து, பிர்மிங்காம், 2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT