ரவிச்சந்திரன் அஸ்வின் கோப்புப் படம்
கிரிக்கெட்

தாயின் அறிவுரையால் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அஸ்வின்..!

நேர்காணல் ஒன்றில் அஸ்வின் தனது சுழல் பந்து வீச்சுக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

DIN

ஓய்வை அறிவித்த பிறகு அஸ்வின் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் தனது சுழல்பந்து வீச்சுகு காரணம் அவரது அம்மா எனக் கூறியுள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

நானும் அப்பாவும் உழைக்க அம்மாதான் மூலக் காரணம். அவர் பெட்ரோல் மாதிரி. அவர் இல்லையென்றால் எங்களால் இவ்வளவு ஓடியிருக்க முடியாது. ஒருநாள் எனது போட்டியைப் பார்க்க வந்தார். நான் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தேன். அப்போது அம்மா, “என்னடா சும்மாவே இருக்க?” எனக் கேட்டார். “அவுட் ஆயிட்டேன் என்ன பண்றது?” என்றேன். அதற்கு அம்மா, “பௌலிங் போடு” என்றார். நான் “பாஸ்ட் பௌலிங் வராது” என்றேன். அதற்கு அம்மா, “சரி ஸ்பின் போடு” என்றார். அப்போது தொடங்கியதுதான் எனது சுழல் பந்துவீச்சுப் பயணம்.

பிறகு இன்னுமொரு முறை என்னால் சரியாக விளையாட முடியவில்லை, உங்களை ஏமாற்றிவிட்டேன் என அம்மாவின் மடியில் படுத்து அழுதேன். அப்போது அம்மா உன்னால் முடிந்தவரை முயற்சி செய். நான் உனக்காக பணம் சேமித்து வைக்கிறேன் எனக் கூறினார். எனது அம்மாவும் அப்பாவும் எனக்காக தியாகம் செய்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என அஸ்வின் கூறினார்.

38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.

இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின், கபில் தேவ் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT