ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.

அபிஷேக் நாயர் கூறுவதென்ன?

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். இது குறித்து அணியில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஷுப்மன் கில் விளையாட முடியாத சூழல் உள்ளது. ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். அணியின் தேவையை ஷுப்மன் கில் புரிந்துகொள்வார். அதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் எனக் கூறமாட்டேன். ஆனால், அவரது இடத்தில் விளையாடுவதில் மாற்றம் இருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT