கேப்டன் டு பிளெஸ்ஸி படம்: ஆர்சிபி/ எக்ஸ்
கிரிக்கெட்

நவ.24க்கு காத்திருக்கிறேன்..! டு பிளெஸ்ஸி பேட்டி!

முன்னாள் ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி ஐபிஎல் ஏலம் குறித்து பேசியுள்ளார்.

DIN

சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டு பிளெஸ்ஸி 2022 முதல் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

மொத்தமாக இதுவரை 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,571 ரன்கள் துவித்துள்ளார்.

37 அரைசதங்களுடன் 136 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். ஆர்சிபியில் விளையாடும்போது கூடுதல் 147 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,636 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மிக அதிரடியாக 438 ரன்கள் உடன் 161.62 ஸ்டிரைக் ரேட்டில் அற்புதமாக விளையாடினார். இருப்பினும் 2025ஆம் ஆண்டுக்கான ஆர்சிபி அணியின் தக்கவைப்பு பட்டியலில் டு பிளெஸ்ஸி இடம்பெறவில்லை.

நவ.24,25 ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

ஏலத்தைப் பற்றி தெரியாது. அங்கு என்ன நடக்கும் என்றும் கணிக்க முடியாது. நவ,24இல் என்ன நடக்குமென அனைவருமே ஆர்வமாக காத்திருக்கிறார்கள். எனக்கு என்ன நடக்குமென எந்த திட்டமும் இல்லை. மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் ஃபிளே - ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.

இதுவரை ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT