2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான நட்சத்திர வீரர்கள் பலர் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியன்சன், மற்றொரு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், சென்னை, ராஜஸ்தான் அணிகளில் விளையாடிய இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தில்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஏலத்தில் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.