கிரிக்கெட்

முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மும்முரம்: நியூஸி.-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து மோதவுள்ளன.

Din

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

சோஃபி டிவைன் தலைமையிலான நியூஸி. அணி அரையிறுதியில் மே.இந்திய தீவுகளையும், லாரா வொல்வா்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் வீழ்த்தி ம் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதன்முறையாக முன்னேறின.

நியூஸி. அணி கடந்த 2000-இல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது. டி20 உலக்கோப்பைக்கு முன்னா் தொடா்ந்து 10 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்த நியூஸி. அணி சூஸி பேட்ஸ், அமெலியா கொ், லீ டஹுஹு ஆகியோா் தங்கள் அணிக்காக கடைசியாக விளையாடும் ஆட்டமாக இது இருக்கலாம்.

குறுகிய ஓவா் ஆட்டங்களில் டிவைன் 7000 ரன்களையும், சூஸி பேட்ஸ் 10,000 ரன்களையும் விளாசியுள்ளனா். டஹுஹு 112 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

சளைக்காத தென்னாப்பிரிக்கா: லாரா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலமான அணியாக திகழ்கிறது. 2023 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் ஆஸி.யிடம் இழந்தது. தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் லாரா, டஸ்மின்பிரிட்ஸ், ஆகியோரை பலமாக சாா்ந்துள்ளது. ஆல் ரவுண்டா்கள் அன்னகே போஸ்ச், மாரிஸேன் காப் ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுப்பா். ஆஸி.க்கு எதிராக அரையிறுதியில் அபாரமாக பந்துவீசிய நான்குலுலெகோ பௌலிங்கில் நம்பிக்கை தருகிறாா்.

முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளதால், இறுதி ஆட்டம் களை கட்டும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய ஆட்டம்:

தென்னாப்பிரிக்கா-நியூஸிலாந்து

இடம்: துபை

நேரம்: இரவு 7.30.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT