இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா சிக்ஸர் அடித்த பந்தினால் ஒளிப்பதிவாளருக்குக் காயம் ஏற்பட்டது.
போட்டிக்குப் பிறகு, ஹார்திக் பாண்டியா அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி நேற்றிரவு அகமதாபாத் திடலில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தனது முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசுவார்.
சிக்ஸருக்கு சென்ற பந்து களத்திற்கு வெளியே இருந்த கேமராமேன் (ஒளிப்பதிவாளர்) கையின் மீது விழுந்தது.
உடனே இந்தியா, தெ.அ. பயிற்சியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தார்கள். பின்னர் அவரது கையில் பனிக்கட்டிகள் அடங்கிய ’ஐஸ்பேக்’ வைக்கப்பட்டது.
23 பந்துகளில் 65 ரன்கள் குவித்த பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டி முடிந்ததும் ஹார்திக் பாண்டியா காயம்பட்ட ஒளிப்பதிவாளரைச் சென்று சந்தித்தார்.
எப்படி இருக்கிறது என நலம் விசாரித்த ஹார்திக் பாண்டியா, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.
நல்லவேளையாக அவருக்கு கையில் அடிப்பட்டது. சற்று மேலே சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்? நான் அவரை கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன்.
பேசியதில்லை என்றாலும் எப்போதும் ஒரு ஹலோ சொல்லுவேன். கடவுள் புண்ணியத்தில் அவருக்கு தலையில் எங்கும் அடிபடாமல், கையில் பட்டது ஒரு வகையில் நல்லது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.