இந்திய அணியினர் படம் | ஏபி
கிரிக்கெட்

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக அதன் பயிற்சியாளர் திலீப் பேட்டியளித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார்.

இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது.

தொடரை வென்ற இந்திய அணி.

இந்தத் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக ஃபீல்டிங் செய்தது. கேட்ச்சுகள், ரன் அவுட்டுகள் என இந்திய அணியினர் அசத்தினர்.

கடைசி போட்டியில் சிறந்த ஃபீல்டிங்கிற்கான விருது ஸ்ரேயாஷ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

ஓவ்வொரு போட்டியிலும் சிறந்த ஃபீல்டிங் செய்பவர்களுக்கு இந்த விருது அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் கூறியதாவது:

நாங்கள் இந்தத் தொடர் முழுவதும் சில சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கினோம். அது ஃபீல்டிங்கில் சில கோணத்தை சிறப்பாக ஏற்படுத்துவதாகட்டும் பின்புறம் ஓடுவது, கேட்ச் பிடிப்பது என போட்டிகளில் முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். என்னைப் பொருத்தவரை அனைவருமே சிறப்பாக செயல்பட்டார்கள்.

ஒரு அணியாக ஃபீல்டிங்கில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் அமைதியாக தொடர்ச்சியாக நன்றாக விளையாடியது நம்பமுடியாத அளவுக்கு திருப்தியாக இருக்கிறது.

2ஆவது போட்டியில் பின்புறமாக ஓடிச்சென்று ஷுப்மன் கில் பிடித்த கேட்ச் முக்கியமானதாகும்.

எல்லைக் கோட்டில் பவுண்டரிகளை சேமித்தது, முக்கியமான ரன் - அவுட்டுகள் என அனைத்துமே முக்கியமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT