படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜனவரி 17) முல்தானில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

93 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது. கம்ரான் குலாம் 9 ரன்களுடனும், சௌத் ஷகீல் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

157 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

202 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஷான் மசூத் அதிகபட்சமாக 52 ரன்களும், முகமது ஹுரைரா 29 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோமெல் வாரிக்கன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

சாஜித் கான், அப்ரார் அகமது அபாரம்

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இருப்பினும், சாஜித் கான் மற்றும் அப்ரார் அகமதின் அபார பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சாஜித் கான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், நோமன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். சாஜித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT