கோப்புப் படம் படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் வென்றுள்ளார்.

DIN

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சார்பில், வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை இலங்கை அணியின் இளம் வீரரான கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் மட்டும் 1,451 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50-க்கும் சற்று அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பாக இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், தற்போது இலங்கை அணியில் தனக்கென அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

நடுவரிசை ஆட்டக்காரரான கமிந்து மெண்டிஸ் கடந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,049 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 74.92 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் 6 பேர் 1000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளனர். அதில் கமிந்து மெண்டிஸும் ஒருவர். கடந்த ஆண்டில் மட்டும் கமிந்து மெண்டிஸ் 5 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர்களில் ஒருவராகவும் அவர் மாறினார்.

மறக்க முடியாத இன்னிங்ஸ்

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடியது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இளம் வீரர் கமிந்து மெண்டிஸுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.

இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் 182 ரன்கள் (250 பந்துகள் - 16 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து அசத்தினார். அந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் எடுத்தது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT