மிட்செல் மார்ஷ் படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!

ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸி. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று லாகூரில் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ஆல்ரவுண்டர்கள் முக்கியம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி நம்பமுடியாத வெற்றியைக் கொடுத்தார்.

பிஜிடி தொடரில் காயம் காரணமாக விலகிய மிட்செல் மார்ஷின் காயம் குணமாக அதிகமான நேரம் தேவைப்படுவதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் மார்ஷ் 93 ஒருநாள் போட்டிகளில் 57 விக்கெட்டுகள் 2,794 ரன்கள் எடுத்துள்ளார் .

கேமரூன் கிரீன் வராவிட்டால் ஆஸி. அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லாத இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT