ருதுராஜ் கெய்க்வாட். படம்: கவுன்டி சாம்பியன்ஷிப்
கிரிக்கெட்

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ருதுராஜ் கெய்க்வாட்!

இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்வது குறித்து...

DIN

இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட இருக்கிறார்.

இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் என்றழைக்கப்படும் ஒருநாள் கோப்பைத் தொடரில் யார்க்‌ஷியர் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கும், ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிர அணிக்கும் கேப்டனாக விளையாடும் 28 வயதான ருதுராஜ் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் இந்த சீசன் முடியும்வரை விளையாடுவர் என யார்க்‌ஷியர் அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்ற ருதுராஜ், இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவருக்கு அங்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

ஒரு சீசனில் நன்றாக விளையாடியவர்களுக்கு எல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்கும்போது பல சீசன்களாக நன்றாக விளையாடிவரும் ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்.

இங்கு விளையாடுவது குறித்து ருதுராஜ், “இங்கிலாந்தில் கிரிக்கெட் அனுபவத்தைப் பெறுவது எனது குறிக்கோளில் ஒன்றாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் யார்க்‌ஷியரை விட பெரிய கிளப் எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

SCROLL FOR NEXT