கேப்டன் டெம்பா பவுமாவுடன் மிட்செல் ஸ்டார்க்.  
கிரிக்கெட்

ஜோக்கர்ஸ் யாரு..? சீண்டிய ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டியது பற்றி...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டியது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்துள்ளார்.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

மேலும், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி பட்டத்தை வென்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி சதமடித்த எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த அணி கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் விளாசியிருந்தார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களை ஜோக்கர்ஸ் (Chokers) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாக்குவாதத்தைத் தூண்டும் விதமாக எங்களிடம் சீண்டலில் ஈடுபட்டனர்.

எய்டன் மார்க்ரம் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அவர்களுக்கு (ஆஸ்திரேலிய அணிக்கு) விட்டுகொடுத்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

இறுதிப் போட்டியில் பலர் எங்களை நம்பினார்கள். பலர் எங்கள் மீது சந்தேகப்பட்டனர். நாங்கள் பல்வேறு நம்பிக்கைகளுடனும், சந்தேகங்களுடன் விளையாட வந்தோம். இந்த வெற்றியின் மூலம் அந்த சந்தேகங்களை எல்லாம் நாங்கள் தற்போது தவிடு பொடி ஆக்கியுள்ளோம்.

பல்வேறு பிரிவுகளாகக் பிரிந்து கிடக்கும் நாட்டில் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் எனக் கருதுகிறோம். இது நம் நாட்டை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். நிறைய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் நாங்கள் விளையாடிய விதம் அதையெல்லாம் அழித்திருக்கும்” என்றார்.

இதையும் படிக்க: பவுமாவின் டெம்பா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT