ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால் ரசிகர்கள் பெரிய அளவில் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அச்சமடையத் தேவையில்லை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால், ரசிகர்கள் அச்சமடையத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சில ரசிகர்கள் கவலையாக இருப்பார்கள் எனத் தெரியும். இந்திய அணியின் சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் சௌரவ் கங்குலி ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால், ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

உலகின் சிறந்த அணியாகவும் இந்திய அணி மாறியது. அதனால், இந்தியாவில் விளையாட்டு மிகவும் பிரபலமாக இருப்பதால், இந்திய அணிக்காக விளையாட போதுமான இளம் வீரர்கள் தொடர்ந்து இருந்துகொண்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது, உங்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். ஏனெனில், வெளிநாட்டு ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது கடினம்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியில் இருந்தபோதும், நாம் நியூசிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடர்களை இழந்தோம். அதனால், தற்போதுள்ள இந்திய அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. புதிய இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT