ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிரேஸ் ஹாரிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிரேஸ் ஹாரிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டபோது, கிரேஸ் ஹாரிஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ள கிரேஸ் ஹாரிஸுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹீதர் கிரஹாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
28 வயதாகும் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி, 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.