கிரிக்கெட்

தீப்தி, அமன்ஜோத் அசத்தல்: இந்தியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலங்கையை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலங்கையை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

மழையால் இன்னிங்ஸுக்கு 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் இந்தியா 47 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் சேர்க்க, இலங்கை 45.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஆட்டத்தில் 124 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், தீப்தி சர்மா, அமன்ஜோத் கெüர் கூட்டணி, அணியை சரிவிலிருந்து மீட்டது. பின்னர் பெüலிங்கிலும் தீப்தி சர்மா சிறப்பாகப் பங்களித்தார்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்களுக்கே வெளியேறி ஏமாற்றமளித்தார்.

உடன் வந்த பிரதிகா ராவல், "ஒன் டவுன்' வீராங்கனை ஹர்லீன் தியோல் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. பிரதிகா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு விடைபெற்றார்.

நிதானமாக அரைசதத்தை நெருங்கிய தியோல் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக் அவுட்டாக, கேப்டன் ஹர்மன் பிரீத் கெüர் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு வீழ்ந்தார்.

ரிச்சா கோஷ் 2 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, தீப்தி சர்மா, அமன்ஜோத் கெüர் கூட்டணி 7-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து, அணியை சரிவிலிருந்து மீட்டது. அமன்ஜோத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57, தீப்தி 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

முடிவில், ஸ்நேஹா ராணா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4, உதேஷிகா பிரபோதனி 2, ஆசினி குலசூரியா, சமரி அத்தபட்டு ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து, 271 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 43, நீலாக்ஷிகா சில்வா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சேர்த்து வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரமா 3 பவுண்டரிகளுடன் 29, ஹாசினி பெரெரா 14, விஷ்மி குணரத்னே 11, கவிஷா தில்ஹரி 15, அனுஷ்கா சஞ்சீவனி 6, சுகந்திகா குமாரி 10, ஆசினி குலசூரியா 17, இனோகா ரணவீரா 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இலங்கை இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

உதேசிகா 14 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நின்றார். இந்திய பெüலர்களில் தீப்தி சர்மா 3, ஸ்நேஹா ராணா, ஸ்ரீசரானி ஆகியோர் தலா 2, கிராந்தி கெüட், அமன்ஜோத் கெüர், பிரதிகா ராவல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

SCROLL FOR NEXT