பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.
பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னௌ அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அய்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக்கோலஸ் பூரன் 19 ரன்களும், ரிஷப் பந்த், அப்துல் சமத் மற்றும் முகுல் சௌதரி தலா 18 ரன்களும் எடுத்தனர். ஜார்ஜ் லிண்டே 16 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அசோக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
Batting first in their IPL match against the Gujarat Titans, the Lucknow Super Giants have scored 164 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.