முகப்பு
கிரிக்கெட்

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?

சிறப்பாக பந்துவீசிய சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன் குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:52 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேமி ஓவர்டன். - படம்: ஏபி
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்காதது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 4 விக்க்கெட்டுகள் வீழ்த்தி 18 ரன்கள் மட்டுமே அளித்தார். அவர் வீசிய ஒவ்வொரு ஓவர்களிலும் 1 விக்கெட் எடுத்தார்.

Advertisement

Advertisement

சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இருப்பினும் பேட்டிங்கிற்கு சாதகமான களத்தில் சிறப்பாக பந்துவீசிய ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்காதது பேசுபொருளாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக ஓவர்டன் வீசியதே இருக்கிறது. அப்படி இருக்க இந்த விருது வழங்காதது நியாயமற்றதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஜேமி ஓவர்டன் வீசிய ஓவரில் டிம் டேவிட் அதிகமான ரன்களை குவிப்பார். அந்தப் போட்டியில் பேட்டிங்கில் நன்றாக விளையாடிய ஓவர்டன் மிகுந்த சோகத்தில் டக் அவுட்டில் சென்று அமர்வார்.

விரக்தியில் தனது ஹெல்மெட்டை கீழே வீசி தனது சோகத்தை வெளிப்படுத்துவார். இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாகக் கொண்டாடுவார்.

அஸ்வின், பீடாக் இது குறித்து தங்களது யூடியூப் காணொலியில் ஆட்ட நாயகன் விருது ஜேமி ஓவர்டனுக்குத்தான் செல்ல வேண்டுமெனப் பேசியிருக்கிறார்கள்.

summary

The Best Bowling Performance of the Season! Why Was Jamie Overton Not Given the Man of the Match Award?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.