டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகுகிறாரா?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் நாளை (பிப்ரவரி 7) முதல் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹர்ஷித் ராணா விலகுகிறாரா?
Advertisement
Advertisement
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது, இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இதுவரை ஹர்ஷித் ராணா விலகவில்லை. முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் நன்றாக உணரவில்லை. அவரது காயத்தின் தன்மை குறித்து மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது என்றார்.
இருப்பினும், ஹர்ஷித் ராணா தற்போது காயத்திலிருந்து குணமடைவதற்கு வாய்ப்பில்லை எனவும், அவர் கண்டிப்பாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகவுள்ளதாகவும் இந்திய அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அல்லது முகமது சிராஜ் இவர்கள் இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது, ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.