முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: ஓமனுக்கு எதிராக 225 ரன்கள் குவித்த இலங்கை!

ஓமனுக்கு எதிராக இலங்கை அணி 225 ரன்கள் குவித்தது பற்றி...

Updated On : 12 பிப்ரவரி 2026, 12:50 pm IST
ஓமனுக்கு எதிராக 225 ரன்கள் குவித்த இலங்கை - PTI
பகிர்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் ஓமன் அணிக்கு 226 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயம் செய்துள்ளது.

இலங்கை கண்டி திடலில் நடைபெற்று வரும் குரூப் சுற்றில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஓமன் அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

Advertisement

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் சற்று நிதானமாக விளையாட மறுபுறம் அதிரடி காட்டினார் பவன் ரத்நாயகே. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பவன் ரத்நாயகே 60 (28 பந்துகள்) ரன்களிலும், குசல் மெண்டிஸ் 61 (45 பந்துகள்) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனிடையே, கேப்டன் தாசுன் ஷானகாவும் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் அரைசதம் அடித்து அவுட்டானார்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை225 இழந்து ரன்கள் குவித்தனர்.

ஓமன் அணியின் ஜிதேன் ராமானந்தி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

summary

T20 World Cup: Sri Lanka score 225 runs against Oman!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.