டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஜூன் 12) முதல் தொடங்குகிறது. பிராதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
கார்டிஃபில் நடைபெற்ற இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 64 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 57 ரன்களும் எடுத்தனர். டேனியல் கிப்சன் 30 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஃபாலி வர்மா, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து வெற்றி!
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 19.5 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 36 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பார்தி ஃபுல்மாலி 18 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 17 ரன்களும் எடுத்தனர். யஷ்திகா பாட்டியா 15 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் லின்ஸி ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சார்லோட் டீன், டில்லி கார்ட்டீன் கோல்மேன் மற்றும் டேனியல் கிப்ஸன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
England defeated India by 5 runs in a T20 World Cup warm-up match.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.