ஆஸ்திரேலியாவுக்கு அவமானம்..! இங்கிலாந்து வீரர் மகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா குறித்து இங்கிலாந்து வீரர் பேசியது...
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா குறித்து இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.
”ஆஸ்திரேலியாவுக்கு இது மிகப்பெரிய அவமானம்” என்றுக் கூறிவிட்டு சிரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையின் குரூப் பி பிரிவில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே, இலங்கையிடம் தோல்வியுற்று, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.
Advertisement
Advertisement
முதல் போட்டியில் வென்ற பிறகு 2 போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அணி, கடைசியாக ஓமனுடன் நடந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
கடந்த 2009க்குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் டி20 உலகக் கோப்பையில் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது.
அணித் தேர்வில் நடந்த குளறுபடிகளும் காயம் காரணமாக பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் விளையாட முடியாமல் சென்றுவிட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் பிபிசிக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:
ஆஸ்திரேலியா வெளியேறியதைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர்கள் நன்றாகவே விளையாடவில்லை.
லீக் சுற்றில் வலுவாக தொடங்கவில்லை எனில் இதுபோன்ற அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது நிச்சயமாக ஆஸ்திரேலியாவிற்கு அவமானம்தான் என்றார்.
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1- 4 என இங்கிலாந்து தோல்வியுற்றது. இரு அணிகளுக்குமே போட்டி ரீதியான பகை இருப்பதால் இங்கிலாந்து வீரரின் கருத்து வைரலாகி வருகிறது.
A video of England player Jacob Bethell speaking about Australia's exit from the T20 World Cup is going viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.